George / 2016 மார்ச் 19 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருட்களுக்கு அடிமையாகி குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வந்த தென்மராட்சி பகுதியினை சேர்ந்த இரு இளைஞர்களை 12 மாதங்கள், கண்டி பல்லேகலவில் அமைந்துள்ள அரச புனர்வாழ்வு மையத்தில் தங்க வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், வியாழக்கிழமை (17) தீர்ப்பளித்ததாக சாவகச்சேரி பொலிஸார், வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தனர்.
400 கிராம் மற்றும் 650 கிராம் கஞ்சாவினை தன் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இருவரையும் சாவகச்சேரி பொலிஸார், புதன்கிழமை (16) கைது செய்திருந்தனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்திய போது இரு இளைஞர்களின் பெற்றோரும் மன்றில் முன்னிலையாகி இருவரின் பழக்கவழக்கங்கள் தொடர்பில் நீதிவானுக்கு கண்ணீருடன் எடுத்து கூறினர்.
கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையான தனது மகன்களை காப்பாற்றி தருமாறும், தகுந்த தண்டனை வழங்குமாறு நீதிவானிடம் கேட்டுக்கொண்டனர்.
சாதாரணமாக சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டால் சந்தர்ப்பவசத்தினால் சிறைச்சாலையிலும் கெட்ட பழக்கவழக்கங்களுக்கு ஆளாகிவிடுவார்கள் என கருதிய நீதிவான், இளைஞர்கள் போதையில் இருந்து விடுபட்டு நற்பிரஜையாக வாழவேண்டும் என கூறினார். இதனால் இவர்கள் இருவரையும் 12 மாதகாலம் புனர்வாழ்விற்கு உட்படுத்துவதாக தீர்ப்பளித்தார்.
24 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago