2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

பொருத்து வீடுகள் தொடர்பில் கருத்துக்கணிப்பு

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தில் கட்டப்படவுள்ள பொருத்து வீடுகள் தொடர்பில், மக்களின் அபிப்பிராயத்தை அறியும் நடவடிக்கையானது பிரதேச செயலக ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, வீட்டுத்திட்டம் தொடர்பில் மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்கான யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் முன்னால் அபிப்பிராயப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில், இந்த வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் வீடுகள் தொடர்பில் மக்களுக்கான விருப்புக்கள், குறைகள், முறைப்பாடுகள் என்பவற்றை தெரிவிக்க முடியும்.

மேற்படி பொருத்து வீடுகளை விரும்பும் பயனாளிகளின் விருப்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

2.1 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் மேற்படி வீடுகள், அதிக பெறுமதியில் அமைக்கப்படுகின்றன என்றும் இந்தச் செலவில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுவது போன்று இரண்டு வீடுகள் அமைக்கலாம் என்றும் மேலும் இந்த வீடுகள் இங்குள்ள சூழலுக்கு பொருத்தமற்ற வீடுகள் என வடமாகாண சபை இந்த வீடுகளை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X