2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பொருத்து வீடுகளை மக்கள் ஏற்றுக்கொண்டனர்

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வட, கிழக்கில் வீடுகள் இல்லாத 65 ஆயிரம் பேருக்கு அரசாங்கத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் மீள்குடியேறுவதற்கு, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வீடற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி திட்டத்தில், கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட மாதிரி வீட்டை அமைச்சர் பார்வையிட்டபோது, பயனாளிகளும் வீடுகளைப் சென்று பார்வையிட்டனர்.

அதன்பின்னர், 'வீடுகள் உங்களுக்கு பிடித்திருக்கின்றதா?' என மக்களிடம் அமைச்சர் வினவினயுள்ளார் .

'20 வருடங்களாக குடிசையில் இருந்த எமக்கு, வீடுகள் வேண்டும். அந்த வகையில், இந்த வீடுகள் எமக்கு பிடித்துள்ளன' என மக்கள் கூறினர்.

பொருத்து வீடுகளாக அமைக்கப்படும் இந்த வீட்டுத்திட்டத்தில், ஒரு வீடு அமைக்க 2.1 மில்லியன் ரூபாய் செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .