2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மாணவியைக் கடத்த முற்பட்ட இளைஞர்கள் கைது

Editorial   / 2017 ஜூலை 18 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- கே.மகா

வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில், நள்ளிரவு வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை கடத்த முற்பட்ட 5 இளைஞர்களை, அப்பகுதி மக்கள் பிடித்து, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை 5 இளைஞர்கள் இணைந்து கடத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போது, மாணவியின் தாயார் கூக்குரல் இட்டதால் தாயாரை அவ்விளைஞர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த தாயார் சிகிச்சைக்காக, ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தப்பியோடிய நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .