2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மத்திய அமைச்சுடன் இணைந்து புதிய நேரசூசி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

மத்திய போக்குவரத்து அமைச்சர் நியமிக்கப்பட்ட பின்னர் வடமாகாண தனியார் மற்றும் அரச பஸ்களுக்கான நேரசூசி தயாரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

தனியார் மற்றும் அரச பஸ்களுக்கிடையில் சரியான நேரசூசி இல்லாமையால், இரு தரப்புக்களுக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை தீர்க்கும் முகமாக கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியம் ஒத்துழைப்பு தரவில்லை.

இதனால் சரியான நேரசூசியை தயாரிக்க முடியவில்லை. மத்திய அரசாங்கத்தின் போக்குவரத்துக்கான அமைச்சு இல்லாமையால் நேரசூசியை தயாரிக்க முடியவில்லை. போக்குவரத்து அமைச்சர் நியமிக்கப்பட்டதும் அவருடன் கலந்துரையாடி நேரசூசி தயாரிக்கப்படுவதுடன், கடந்த காலத்தில் ஒத்துழைப்பு வழங்காத அரச பஸ் சேவை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .