2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

முன்னாள் உறுப்பினருக்கு 2 ஆம் மாடிக்கு அழைப்பு

Editorial   / 2019 நவம்பர் 12 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ரெலோவின் இளைஞரணி செயலாளருமான ச.குகதாஸ், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் 2 ஆம் மாடிக்கு நாளை(13) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் உள்ள  ச.குகதாஸின் வீட்டுக்கு, கடந்த 9ஆம் திகதி சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், விசாரணைக்கான அழைப்பாணையை அவரிடம் கையளித்துள்ளனர்.

அந்த அழைப்பாணையில், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதால் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினம்,தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் ஆகியவற்றில் கலந்துகொண்டமை தொடர்பாகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் தெரிவித்தார்.

-நிதர்ஷன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .