Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 09 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், சொர்ணகுமார் சொரூபன்
யாழ். மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் தரத்தைப் பரிசோதனை செய்யும் நடவடிக்கையை யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பிரிவு இன்று புதன்கிழமை (09) மேற்கொண்டது.
யாழ்.மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பிரிவின் ஆணையாளர் எஸ்.மதிவண்ணன் தலைமையில் மாநகர சபை மைதானத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தரப் பரிசோதனைக்கு யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கினர்.
முச்சக்கரவண்டியிலுள்ள தேவையில்லா கண்ணாடிகள், தேவையற்ற அலங்கரிப்புக்கள், அநாவசியமான படங்கள் ஒட்டப்பட்டுள்ளமை மற்றும் இருக்கைகள், கம்பிகள் உக்கியுள்ளதா உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது பரிசோதனை செய்யப்பட்டது.
அனைத்தும் சீராக காணப்படும் முச்சக்கரவண்டிகளுக்கு தரப்பரிசோதனை செய்யப்பட்ட ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டது. குறைகள் இனங்காணப்பட்டவர்களுக்கு அதனைச் சீர் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் குறைகளைச் சீர்செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தவறின், மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடமுடியாது எனவும் கூறப்பட்டது.
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025