2025 ஜூலை 02, புதன்கிழமை

மினிசூறாவளியால் 35 குடும்பங்கள் பாதிப்பு

George   / 2016 மே 17 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அல்வாய் மற்றும் அல்வாய் வடக்கு ஆகிய பிரதேங்களில் திங்கட்கிழமை (16) ஏற்பட்ட மினிசூறாவளியால் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மினிசூறாவளியால், வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டதுடன் பனை மரங்கள், மின் வடங்கள் மீது முறிந்து வீழ்ந்தமையால் மின்கம்பங்களும் முறிவடைந்தன. இதனால், இப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டது.

மேலும், வீடுகளில் உள்ள பயன்தரு மரங்களும் இதனால் அழிவடைந்ததுடன் இடம்பெயர்ந்த சிலர் தமது உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .