Princiya Dixci / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
நிரந்தர நியமனம் கோரி, வடமாகாணத்தில் கடமைநிறைவேற்றும் அதிபர்களாக நியமிக்கப்பட்ட அதிபர்கள், வடமாகாண சபைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை (22) பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடமைநிறைவேற்றும் அதிபர்களாக செயற்படும் தம்மை மத்திய அரசாங்கத்தில் மூலம் நிரந்தர அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வழமையாக நியமிக்கப்பட்ட அதிபர்கள் சேவை, மூப்பின் அடிப்படையில் நிரந்தர சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவதே இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிபர் சேவை பிரமாணத்துக்கமைய போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்குப் புதிய அதிபர் சேவை நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை கடமைநிறைவேற்றும் அதிபர்களாக கடமையாற்றிய அதிபர்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், கடமைநிறைவேற்றும் அதிபர்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் ஏனைய மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகளில் புதிய அதிபர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் வட மாகாணத்தில் மட்டும் மாறாக கடமைநிறைவேற்றும் அதிபர்களை நீக்க எடுக்கும் முயற்சி வேதனையளிக்கின்றது என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவித்தனர்.
23 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago