2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

விபத்தில் பெண் உயிரிழப்பு: அதிர்ச்சியில் சகோதரியும் உயிரிழப்பு

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், செந்தூரன் பிரதீபன்

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தனது சகோதரி உயிரிழந்த செய்தியைக் கேட்டு, அதிர்ச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில், நேற்று (02) இடம்பெற்றுள்ளது.

கொழும்புத்துறை- குருநகர் பிரதான வீதியில், பெப்ரவரி 20ஆம் திகதயின்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவர், நேற்று (02) உயிரிழந்தார்.

ஜோன்சன் வலன்சன் ஜெகதீஸ்வரி (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே, இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த பெண் உயிரிழந்ததை அறிந்த அவரது சகோதரியான ஜோஜ் கெனடி றஞ்ஜினி (வயது 57) என்பவர், அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .