2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டவரைத் தாக்கியவருக்கு மறியல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

வெளிநாட்டவர் ஒருவரைத் தாக்கி, அவரது அலைபேசி, 54 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை அபகரித்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை, செப்டெம்பர் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், நேற்று (27) உத்தரவிட்டார்.

அத்துடன், சந்தேகநபரை எச்சரித்த நீதவான், சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட அலைபேசியை உரிய வெளிநாட்டவரிடம் மீள வழங்குமாறும் விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அண்மையில், பண்டத்தரிப்பு பனிப்புலத்தைச் சேர்ந்த ஒருவர், சுற்றுலாப் பயணியாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிருந்த வெளிநாட்டு நபரொருவரை, அவரிடம் இருந்த அலைபேசி, 54 ரூபா பணத்தை அபகரித்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில், பாதிக்கப்பட்ட வௌிநாட்டு பிரஜையால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X