2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

விபத்துக்களை தடுக்க விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கிருஸ்ணகுமார்

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, மோட்டார் போக்குவரத்து அமைச்சு மற்றும் வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளும் விபத்துக்களை தடுத்தல் தொடர்பாக யாழ்.மாவட்ட அரச ஊழியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் உரையாற்றுகையில்,

'யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்துள்ள இவ்விசேட கருத்தரங்கு ஏனைய 4 மாவட்டங்களிலும் இடம்பெறும். எமது மாகாணத்தில் தற்போது வாகன நெரிசல் கூடியுள்ளமையினாலும் ஒரு சில வீதிகள் பழுதடைந்து காணப்படுவதனாலும் விபத்துக்களுக்கு சாதகமாகவுள்ளன. அதனை தடுக்கவே இவ்வாறு விழிப்புணர்வுகளை மேற்கொள்கின்றோம். நாடு முழுவதும் தினமும்; குறைந்தது மூன்று அல்லது நான்கு விபத்துக்களில் உயிரிகள் இழக்கப்படுகின்றன.

'ஒவ்வொரு சாரதிகளும் அசமந்தப்போக்கில் வாகனத்தை செலுத்துவதும் ஏனைய பாதசாரிகள் உரிய இடங்களில் உரியவாறு நடந்துகொள்ளாமையும், கடவைகளை மற்றும் வீதி ஒழுங்கு விதிகளை பின்பற்றாமையுமே விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணமாகும். எதிர்வரும் காலத்தில் ஒவ்வொரு சாரதிகளும் கவனமாக வாகனங்களை செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு விபத்துக்களையும்  தவிர்த்துக்கொள்ளலாம்' என்றார்.

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.பத்திநாதன், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் 50 அரச ஊழியர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .