Princiya Dixci / 2016 ஜூலை 25 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
காங்கேசன்துறை வீதி, இணுவில் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணுவில், திரையரங்கு வீதியைச் சேர்ந்த இளையதம்பி செல்வராசா (வயது 60) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
இணுவில் பகுதியில் மஞ்சள் கடவையைக் கடந்து சென்ற மேற்படி முதியவரை, மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து, முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுமார் 13 மணித்தியாலங்களாக முதியவருக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் இருந்தமையே அவர் உயிரிழந்தமைக்குக் காரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி என்.பிறேம்குமாருக்கு முதியவரின் உறவினர்கள் கூறினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .