Gavitha / 2015 நவம்பர் 22 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், லொறி ஒன்றின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (21) மாலை கொடிகாமம் இராமவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் இருவரே படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விருவரும் முதலில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற லொறி, சடுதியாக வேகத்தினை குறைத்ததால், பின்னால் சென்ற பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் பலத்த வேகத்தில் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
5 hours ago