2020 நவம்பர் 25, புதன்கிழமை

வடபிராந்தியத்தில் 116 கோடி ரூபாய் செலவில் சுகாதார திட்டங்கள்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 08 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வடபிராந்தியத்தில் எதிர்வரும் 2011ஆம் 2012ஆம் ஆண்டுகளுக்குள் பாரிய சுகாதார திட்டங்களை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த திட்டத்தில் 5 வைத்தியசாலைகள் புனரமைப்படுவதுடன், மேலும் 20 வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவம் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.  

அத்துடன், வைத்திய அதிகாரிகளுக்கான குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதுடன், மேலதிகமாக 200 நோயாளர்களுக்கான படுக்கை வசதிகளும் செய்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

116 கோடி ரூபாய் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த சுகாதார அபிவிருத்தி திட்டங்கள் மூலம் குடநாட்டு மக்கள் பெரிதும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .