2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

18 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி தாளையடிப் பகுதியிலுள்ள வீடொன்றில், 18 கிலோகிராம் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவரை, மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள், திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே, 18 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது என்றும் ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டார் என்றும் எனினும், ஏனைய சிலர் தப்பிச் சென்றுவிட்டனர் என்றும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, தப்பிச் சென்றவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--