2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 201 பேர் யாழில் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா, சுமித்தி தங்கராசா
 
சிறு குற்றச் செயல்களில் ஈடுப்பட்ட 201 பேர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.
 
யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
 
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச் செயல்களின் பிரகாரம் நீதிமன்றத்தினால்; பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 32 பேரும், அடித்து காயம் ஏற்படுத்தியவர்கள் 15 பேரும் இதில் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 31 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 16 பேரும்,  சட்டவிரோத மது விற்பனை செய்த 13 பேரும், திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டுகளில் 03 பேரும், கொள்ளையில் ஈடுபட்ட 03 பேரும், கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி விபத்திற்கு காரணமான 04 பேரும், பாலியல் குற்றச்சாட்டில் ஒருவரும், மதுபோதையில் கலகம் விளைவித்த 08 பேரும், வாள் வைத்திருந்தவர் ஒருவரும், பாரிய குற்றம் புரிந்த 02 பேரும், நட்டம் ஏற்படுத்திய ஒருவரும் கைதாகியுள்ளனர்.

பொது இடத்தில் மது அருந்திய 07 பேரும், சட்டவிரோத மின்சாரம் பெற்ற 19 பேரும், கடல் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேரும், ஏனைய குற்றங்கள் புரிந்த 19 நபர்களுமாக மொத்தம் 201 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .