2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மத்திய வங்கி பிரதி ஆளுநர் யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டபிள்யூ.எம்.கருணாரத்தின அடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து கால்நடைத் திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவுத் திணைக்கள அதிகாரிகள், கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் விடுதியில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தக் குழுவில் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி வீ. அமிர்தலிங்கம், மத்திய வங்கியின் வடமாகாணப் பிரதி இயக்குனர் இ.ஸ்ரீதரன் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.

யாழ்.குடாநாட்டில் பால் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவும் உற்பத்தி செய்யப்படும் பால்பொருள்களை எவ்வாறு நீண்ட நாள்களுக்குப் பாதுகாப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பால் பொருள்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் 6 பேருக்கு தலா ஒரு கோடி ரூபா பெறுமதியான இயந்திரப் படகுகள் வழங்குவது குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--