2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சந்நிதியான் ஆலய சுற்றாடலில் மாபெரும் இரத்ததான முகாம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சங்கவி)

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டை நீக்கும் முகமான நாளை தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆலய சுற்றாடலில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றை நடத்துவதற்கு யாழ்.போதனா வைத்தியசாலை இரத்தவங்கி ஏற்பாடு செய்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனைத்து குருதி வகைகளுக்கும் சடுதியாகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த விசேட இரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இரத்தவங்கியினர் தெரிவித்துள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X