2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

உரிமை கோரப்படாத சடலங்களை பொறுப்பேற்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்   வைக்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களை, உரியவர்கள் வந்து பெற்றுக்கொள்ளும்படி யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி என்.பவானி கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டு மரணம் அடைந்த நிலையில் குழந்தை உட்பட இருவரின் சடலங்கள் உரிமை கோரப்படாத நிலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

பொன்னாலையைச் சேர்ந்த செலவராணி இரட்னம் என்பவரின் குழந்தையும் தென்னிலங்கையைச் சேர்ந்தவரான கே.எ.குனில் என்பவரின் சடலமுமே உறவினர் பொறுப்பேற்கும் வரையில் வைத்தியசாலையில் வைத்திருக்கின்றன.

இன்னும் இரண்டு நாட்களில் உறவினர்கள் சடலத்தை பொறுப்பேற்காத நிலையில் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X