2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இந்திய அரசின் வீட்டுத்திட்டம் தொடர்பாக யாழ். செயலகத்தில் ஆராய்வு

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி,தாஸ்)

இந்திய அரசாங்கத்தால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள  வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக ஆரம்ப மதிப்பீட்டுப் பணிகளை ஆராய்வதற்கு அந்நாட்டு உயர் மட்டப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ளனர்.

நேற்று வருகைதந்திருந்த இவர்கள் இன்று வியாழக்கிழமை யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை யாழ். செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிப்படைந்துள்ள வீடுகளைப் புனரமைப்பதற்கும் புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் இந்திய அரசு நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது.

இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான ஆரம்ப மதிப்பீட்டுப் பணிகளை ஆய்வு செய்வதற்கென வருகைதந்துள்ள இக்குழுவில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் பிரதிநிதிகள் அடங்குவர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரமான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும் என்று யாழ். அரச அதிபர் இச்சந்திப்பின்போது அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் மறவன்புலோ பகுதிக்கு விஜயம் செய்து அங்கு சுவிஷ் நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ள வீடுகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--