Super User / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
யாழ். மாவட்டத்தில் சட்டத்தரணிகளுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சட்டத் தேவைகளை நிறைவேற்றுவதில் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சட்டத்தரணிகள் எதிர்காலத்தில் உருவாகாது போவார்களேயானால் யாழ். மாவட்ட மக்கள் மாத்திரமன்றி வடபுலத்து மக்களும் சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் எதிர்காலத்தில் பெரும் நெருக்கடி தோன்றும்.
வெளிமாவட்டங்களில் இருந்தே சட்டத்தரணிகளை வரவளைக்க வேண்டிய நிலை தோன்றும் என்று மூத்த சட்டத்தரணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
1970ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ். மாவட்டத்தில் தலைசிறந்த சட்டத்தரணிகள் உட்பட 215 சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை ஆகிய நீதிபரிபாலனப் பகுதிகளில் கடமையாற்றினர்.
இவர்கள் யாழ். மாவட்டத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி கொழும்பு உள்ளிட்ட ஏனைய வெளிமாவட்டங்களிலும் கடமையாற்றி வந்தனர்.
யாழ்ப்பாணம் நீதிபரிபாலனப் பகுதியில் 90 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகளும் பருத்தித்துறை நீதிபரிபாலனப் பகுதியில் 72 சட்டத்தரணிகளும் மல்லாகம் நீதிபரிபாலனப் பகுதியில் 30 சட்டத்தரணிகளும் சாவகச்சேரி நீதிபரிபாலனப் பகுதியில் 15 சட்டத்தரணிகளும் ஊர்காவற்றுறை நீதிபரிபாலனப் பகுதியில் 07 சட்டத்தரணிகளும் முன்னர் கடமையாற்றினர்.
தற்போது இந்தநிலை முற்றிலும் மாறுபட்டுவிட்டது. யாழ்ப்பாணத்தில் 30 பேரும் மல்லாகத்தில் 10 பேரும் பருத்தித்துறையில் 07 பேரும் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். - என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
25 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
57 minute ago
1 hours ago