2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மின்னல் தாக்கி மீனவர் பலி

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். இன்பச்சுட்டிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி பலியானார். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படகிலிருந்தவாறு இருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் மின்னல் தாக்கி இறந்துள்ளார். அல்வாய் வடமத்தியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அருள்மரியதாஸ்பிள்ளை மரிடிக்ஸன் (34) என்பவரே பலியானவர் ஆவார்.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கே. சுப்ரமணியம் விசாரணைகளை மேற்கொண்டார்.

பலியானவரின் சடலம் வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--