2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாகச் சவுக்கு வெட்டியவர்கள் பொலிஸாரால் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் சவுக்கு மரங்களை விறகுக்காகச் சட்டவிரோதமாக வெட்டிய 14 பேரை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் மூன்றாவது அங்கமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு உதவிப் பொலிஸ் சுப்பிரிண்டன் எம். ஜே.சமரநாயக்காவின் வழிகாட்டலில் அதேபிரிவைச் சேர்ந்த பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த தலைமையில் சென்ற குழுவினர் நடத்திய திடீர் சோதனையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் பொலிஸாரினால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .