2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

வடக்கு மாகாண மட்டத்தில் ஆண்டிறுதிப் பரீட்சை

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஞானசெந்தூரன்)

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் வடக்கு மாகாண மட்டத்தில் தரம் 9 தரம் 11 மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆண்டிறுதிப் பரீட்சைகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

ஆண்டிறுதிப் பரீட்சை தரம் 9, தரம் 11 மாணவர்களுக்கு மாகாண மட்டத்திலும் ஏனைய மாணவர்களுக்கு கல்வி வலய மட்டத்திலும் நடைபெறவுள்ளன.

தரம் 9, தரம் 11 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படவுள்ளன. ஏனைய பாடங்கள் வலயக் கல்வி அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .