Super User / 2010 நவம்பர் 01 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
"யாழ். பொதுநூலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் கவலையையும் மனவேதனையையும் அளிக்கிறது. தமிழர்களைப் பொறுத்த வரையில் இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்துள்ளது" என நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பூத்த முதல் தரமான நூலமாக யாழ். நூலகம் கருதப்பட்டு வந்தது. இந்த நூலகம் முன்னரும் தீயசக்திகளால் எரியூட்டப்படது. இதன் காரணமாக அரிய பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் தீயின் நாக்குகளால் தீண்டப்பட்டிருந்தன. இந்த இழப்பை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத நிலையிலும் யாழ். நூலகம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு பணிகளை ஆரம்பித்த நிலையில் மீண்டும் அது இன்னொரு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது வேதனைதரும் விடயம். இதனை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதேவேளை, இந்த நூலகத்தின் பாதுகாப்புத் தொடர்பிலும் இப்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பையும் யாழ். மாநகர சபையே ஏற்றிருக்க வேண்டும். உரிய பாதுகாப்பினை இந்த நூலகத்துக்கு வழங்கியிருந்தால் இவ்வாறான விரும்பத்தகாத சம்பவம் இடம்பெறாமல் தவிர்த்திருக்க முடியும்.
இந்தச் சம்பவத்துக்கான முழுப்பொறுப்பினையும் அவர்கள் ஏற்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
9 minute ago
38 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
38 minute ago
47 minute ago
3 hours ago