Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
எங்களுக்குரிய அடிப்படை வசதிகளைச் செய்து தாருங்கள் அல்லது எங்கள் சொந்த இடங்களில் எங்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு தென்மராட்சியிலுள்ள இராமாவில் நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த மக்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இராமவில் முகாமில் உள்ள மக்கள் அனைவரும் இந்த வருடத்துக்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள் என அரசு அறிவித்திருந்தது.
ஆயினும் அவ்வாறு நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தற்போது இராமாவில் முகாமில் 330க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
தற்போது எந்தவொரு தொண்டு நிறுவனமும் எமக்கு உதவிகளைச் செய்வதில்லை, மருத்துவ வசதிகள், போஷாக்குணவு என்பன இல்லாமல் இங்குள்ள குழந்தைகளும் கர்ப்பிணித் தாய்மாரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதைவிட இங்குள்ள குடிசைகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதால் மழை நீர் உட்புகுந்து, அங்கு வசிக்க முடியாத அளவுக்கு தரைப்பகுதி சேறு சகதியுமாக மாறிவிட்டது.
மலசல கூடக் கழிவுகளை உரிய காலத்தில் அகற்றாமையால் அவை நிரம்பி வழிகின்றன. குடிநீர் வசதியும் சீரில்லை. இந்நிலையில் எவ்வாறு வசிக்க முடியும்? இத்தகைய அவலங்களுக்கு உரியவர்கள் விரைவில் தீர்வு காணவேண்டும். இல்லாவிட்டால் எமது சொந்த இடங்களில் எம்மை மீள்குடியேற்றினால் எமது சொந்தக் காலில் நின்று எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக்கொள்வோம்- என்று அந்த மக்கள் தமது கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
59 minute ago
1 hours ago