2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் புதிய கல்விச்சேவை தொலைக்காட்சி அலைவரிசை

Super User   / 2010 நவம்பர் 10 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மாவட்ட கல்விச் சமூகத்தின் நலன் கருதி, கல்விச் சேவை தொலைக்காட்சி அலைவரிசையொன்று இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கல்வி ரீவி.. எனப் பெயரிடப்பட்ட இத்தொலைக்காட்சியில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரு மணித்தியாலங்கள் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என கல்வி ரீவி. நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.குகநாதன் தெரிவித்தார்.

கேபிள் மூலம் இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன.

இன்று பிற்பகல் க.பொ.த. உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான மீட்டல் வகுப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் இத்தொலைக்காட்சி மூலம் வகுப்புகளை நடத்த விரும்பும் ஆசிரியர்கள் தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0

  • jeyarajah Wednesday, 10 November 2010 06:47 PM

    மாணவர்கள் சார்பில் திரு குகநாதன் அவர்களுக்கு மனமார்நத நன்றிகள்.இந்த சேவையை மாணவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் ஒளிபரப்பினால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்குப் போகும் நேரத்தையும் தவிர்த்தல் மேலும் பயனளிக்கும்.மாலை ஆறு மணி தொடக்கம் நல்லது என்று நம்புகின்றேன்.அதிகூடிய பயன் அதுவே
    எனது நோக்கம்.காளைகளும் வீடு வந்து சேரும்.இந்த நிகழ்ச்சியை
    on line programe ஆக்குவது பற்றி தொடர்ந்து வரும் காலங்களில் யோசிக்கலாம். நன்றி கோடி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--