Menaka Mookandi / 2010 நவம்பர் 10 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் வடமாராட்சி கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது இராமாவில் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களை பார்வையிடுவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் பராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழிலாண்மை அபிவிருத்;தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தா ஆகியோர் அங்கு விஜயம் செய்தனர்.
அங்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரும் அமைச்சரும் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்ததோடு அவற்றுக்கு உடனடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
வடமராட்சி கிழக்கிலுள்ள வெற்றிலைகேணி நாகர்கோவில் மற்றும் சுண்டிக்குளத்தைச் சேர்ந்த சுமார் 332 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததும் இவர்கள் அப்பகுதிகளில் விரைவில் குடியமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் டக்ளஸ் உறுதியளித்தார்.
இதேவேளை இந்த நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சைக்கிள்களையும் சப்பாத்துக்களையும் வழங்குவதாக வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இதன்போது உறுதியளித்தார்.


4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago