2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வட மாகாணத்தில் கைத்தொழில் பேட்டைகள்

Super User   / 2010 நவம்பர் 11 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வட பிராந்தியத்தில் வவுனியா, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவும் வேலைத்திட்டங்கள் துரிதப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் வருடாந்த கூட்டம் இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போதே கைத்தொழில் வணிப துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த விடயம் தொடர்பாக அறிவித்தார்.

இலங்கையின் ஆடை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி மூலம் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடந்த வருடங்களில் வருமானமாக கிடைத்துள்ளது.

இது இலங்கை மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 45 சதவீதம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆடைத் தொழிற்றுறையில் 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக தொழில் புரிந்து வருகின்றனர்.

இதேவேளை, இந்த தொகையை விட இரண்டு மடங்கானவர்கள் மறைமுகமாக தொழில்புரிகின்றனர் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .