2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் - நூல் வெளியீடு

Kogilavani   / 2010 நவம்பர் 13 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

' பெரியபுராணம் காட்டும் வாழ்வியல்' என்ற பொருளில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 17 ஆம் திகதி, புதன்கிழமை, காலை 10.30 மணிக்கு நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள கம்பன் கோட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.

கலாநிதி மனோன்மணி சண்முகதாஸின் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந் நூல் அமைந்துள்ளது.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கம்பவாருதி  இ.ஜெயராஜ் தலைமை வகிக்கிறார்.

நூலின் அறிமுகவுரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் க.இரகுபரனும்,  நயப்புரையை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அதிபர் சிவமலர் அநந்தசயனனும்,  நிறைவுரையை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸும் ஆற்றுவர்.

இந்நூல் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், விரிவுரையாளர் ச.லலீசன் ஆகியோரால் தொகுப்பாக்கம் செய்யப்பட்டு, குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .