2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கைதடி - கோப்பாய் பாலம் பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)
கைதடி - கோப்பாய் வெளியில் அமைந்திருக்கும் பாலத்தின் புனரமைப்பு வேலைகள் முடிவடைந்ததையடுத்து, இந்தப் பாலம் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடிந்த நிலையில் காணப்பட்ட இந்தப் பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகள் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தது.   


இந்த பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகளையொட்டி, இதனூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வீதியினூடாகவே நடைபெற்று வந்தன.

இந்தப் பாலம் 100 அடிக்கும் அதிகமான நீளத்தையுடையமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--