Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 15 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
'நாம் இலங்கையர்கள்' அமைப்பின் ஏற்பாட்டில் காணாமல் போனவர்கள் மற்றும் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களை வெளியிடுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கற்கள் வீசப்பட்டன.
யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கற்கள், தக்காளிப் பழங்கள், கூழ் முட்டைகள் ஆகியவற்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹந்துன்நெத்தி மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் லலித் குமார ஆகியோருடன், காணாமல் போனவர்களின் பெற்றோர்களின் ஒருபகுதியினரும் கலந்துகொண்டனர்.
சுமார் 20 நிமிடம் வரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காணாமல் போனவர்கள் மற்றும் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை நினைத்து பெற்றோர்கள் கதறியழுதனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago
41 minute ago
1 hours ago