2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

யாழ்.பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்று முற்பகல் கைக்குண்டொன்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இன்று  பல்கலைக்கழக வளாகத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுத்திகரிப்பாளர்கள் இக்கைக்குண்டு தொடர்பாக கொடுத்த தகவலினையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் இராணுவத்தினருக்கு அறிவித்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உணவகத்திற்கு பின்புறத்தில் இருந்து இராணுவத்தினர் கைக்குண்டை கண்டுபிடித்தனர்.

அக்குண்டை செயலிழக்கச் செய்வதற்காக இராணுவத்தினர் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை என யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--