Super User / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு நேரத்தில் புறப்படும் கடைசி பஸ் சேவையை குப்பிளான் வரை சென்றுவர நடவடிக்கையெடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
யாழ். பஸ் நிலையத்திலிருந்து கடைசி பஸ்கள் இரவு 8.00 மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கின்றன. இவ்வாறு காங்கேசன்துறை வீதி வழியாக வரும் கடைசி பஸ் குப்பிளானுக்குச் செல்லாது குப்பிளான் செல்லும் பயணிகளை மல்லாகம் சந்தியில் இறக்கிவிட்டுச் செல்கின்றன.
குப்பிளான் செல்லும் மக்கள் சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம் மின்சார வசதிகள் கூட இல்லாத வீதி வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதன் காரணமாக இரவு நேர கடைசி பஸ் சேவையை குப்பிளான் வரை நடத்தும் படி யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரிடம் உடுவில் பிரதேச செயலக ஒருங்கினைப்பு குழுக்கூட்டத்தில் பொதுமக்களால் கோரிக்கை முன் வைக்கப்பட்டள்ளது.
10 minute ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
6 hours ago
6 hours ago