Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 14 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
பாடசாலை அதிபர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியுள்ளார் என்று குறித்த மாணவனின் பெற்றோரால் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் காதில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்காக அம்மாணவன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சுண்ணாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இவ்விடயம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
asker Saturday, 15 January 2011 05:06 PM
அடியாத மாடு படியாது
Reply : 0 0
xlntgson Monday, 17 January 2011 09:50 PM
asker, மாணவர்களை மாடுகளாக நினைத்த காலம் போய் இப்போது ஆசிரியர்களை...
என் பிள்ளையை காரணமில்லாமல் அடித்திருந்தும் நான் பாடசாலையைத் தான் மாற்றினேனே ஒழிய அந்த ஆசிரியை காவல் நிலையத்துக்கு இழுக்க வில்லை. அந்த ஆசிரியை இவன் அப்பாவி, இவன் அப்பா இன்னும் ஒரு பிழைக்க தெரியா அஹிம்சாவாதி, ஆகவே இவனை அடித்தால் நமக்கு வம்பில்லை என்று தெரிந்தே அடித்து பழியை அவன் மீதே போட்ட போது அவனுக்கு காயம் இருந்தும் நான் பொலீசுக்கு போக வில்லை. ஏனெனில் அப்பெண் அவனது வகுப்பு ஆசிரியை வராததனால் பார்த்துக்கொண்ட ஒருவர், ஆகவே வேண்டுமென்றே
Reply : 0 0
xlntgson Tuesday, 25 January 2011 09:14 PM
ஒரு மாணவனை அடித்து நன்றாக பயம் காட்டிவிட்டால் முழு வகுப்பே அமைதி அடைந்துவிடும் தான் தன வகுப்பை கவனிக்கலாம் என்று
இவ்வாறு செய்யும் ஆசிரியர்கள் அநேகம் இருக்கின்றனர். நான் பொலீசுக்கு போய் இருந்தால் அந்த ஆசிரியை வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பார் ஆனால் எனது நிம்மதியும் என் பிள்ளையின் படிப்பும் பலி ஆகி இருந்திருக்கும் ஊடகங்களுக்கு வேட்டையாக இருந்திருக்கும். புளித்த வாய்களுக்கு மெல்ல நல்ல கடி கிடைத்திருக்கும் ஏன் ஏன் என்று கேட்கும் வண்ணம் என் மகனை அங்கிருந்து விலக்கி வேறு பாடசாலையில் சேர்த்து விட்டேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago