Suganthini Ratnam / 2011 ஜனவரி 16 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நீர்வேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் உட்பிரவேசித்த இராணுவச்சிப்பாயொருவர் இளம் யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நீர்வேலியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இராணுவச்சிப்பாய் நீர்வேலி படைமுகாமைச் சேர்ந்தவரென அடையாளம் கண்ட பொதுமக்கள், அவரை யாழ். கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், யாழ். நீதிவான் வீட்டில் கோப்பாய் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட இராணுவச் சிப்பாயை ஒரு வாரத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
தற்போது இராணுவச்சிப்பாய் யாழ். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
4 hours ago
26 Nov 2025
26 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
26 Nov 2025
26 Nov 2025