2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சூரியப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற சூரியப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்று வரும் இவ்விழாவில், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார், உதயன்,  வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி,  யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் யாழ்., முல்லைத்தீவு, கிளிநொச்சி அரசாங்க  அதிபர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்நிகழ்வை புறக்கணித்திருந்த நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி அப்பாத்துரை கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, யாழ். திருமலை கலாமன்ற மாணவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்று நடன நிகழ்வொன்றை நிகழ்த்தினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X