2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வடக்கு உலக வங்கித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான விசேட மாநாடு

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடக்குப் பகுதிகளில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். பொதுநூலகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியினால், வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்வதற்காக இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--