Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்,கர்ணன்,கவிசுகி,)
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாளின் இறுதிக் கிரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு வல்வெட்டித்துறை பொதுமயானத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 10.30 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் இவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு வல்வெட்டித்துறை, ஆலடி ஒழுங்கையிலுள்ள அவரது மகளின் வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டு பின்னர் அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் மாலை 4 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பூதவுடல் தகனம் செய்யப்படுமெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தற்போது இவரது சடலம் ஊரணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பகுதியில் துக்கம் அனுஷ்டித்து கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, வல்வெட்டித்துறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படப்பிடிப்பு:-கிரிசன்
.jpg)
.jpg)
.jpg)
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025