2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மீள்குடியேறிய மக்களுக்கு கூரைத்தகடுகள்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரியாலை கிழக்கு வசந்தபுரம்,  யாழ். பொம்மைவெளி பகுதி ஆகிய பகுதிகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வீடமைப்பதற்காக கூரைத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடமாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி காணி நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் அமைச்சுப் பணிமனையில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரால் கூரைத்தகடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  

மீளக்குடியேறியுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 12 கூரைத்தகடுகள் வழங்கப்படுமென தெரிவித்ததுடன், மிக விரைவில் நிரந்தரமாக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி காணி நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹலால்டீன், யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ றீகன,; யாழ். பிரதேச செயலாளர் திருமதி எஸ்.தெய்வேந்திரம் ஆகியோருடன் அமைச்சு அதிகாரிகள் ஆளுநர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--