2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

யாழ்.பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்க நடவடிக்கை: பஷில்

Super User   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சேதுராமன், கவிசுகி)

யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தேசிய வியாபார முகாமை நிறுவகத்தின் (NIBM) யாழ் கிளை மற்றும் யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கான புதிய கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

"இலங்கையிலேயே பொறியிலாளர்களை அதிகமாகக் கொண்ட நகரம் யாழ்ப்பாணம்தான். ஆனால் இங்கு பொறியியல் பீடமொன்று இல்லை. அந்த குறைப்பாட்டை நீக்குவதற்கு இப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக பல வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் " என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறினார்.

இளைஞர்விவகார, மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு  நிதியுதவி வழங்கிய தென்கொரிய  அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டு தூதுவர் சோய் கீ சூல்,  வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், ஈழமக்கள் ஜனநாயக்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .