2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கைத்தொலைபேசியில் ஆபாச படங்களை சேமித்து வைத்த இளைஞனுக்கு சிறை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

ஆபாசப்படங்களை கையடக்கத் தொலைபேசியில் சேகரித்து வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தினால் நான்கு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமை தெல்லிப்பளைப் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருடைய கையடக்க தொலைபேசியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போது குறிப்பிட்ட இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்கள் சேகரிக்கப்பட்டு வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் அவர் ஆஜர் செய்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணையின்போது நீதிமன்றினால் இளைஞர் குற்றவாளியாக காணப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்ப வழங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--