2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தேர்தல் கடமையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இலவச உணவு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு இலவசமாக இரவு நேர உணவு வழங்கப்படவுள்ளது.

இது சம்பந்தமான அறிவித்தல் கிராம அலுவலர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கடமையாற்றும் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஆண் அலுவலர்கள் ஆண் லிகிதர்மார்களும்; வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கும் பெட்டிகளுடன் முதல் நாள்  இரவு  தங்கவேண்டிய நிர்ப்பந்தமுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் இவர்கள் வாக்களிப்பு நிலையத்தில் தங்காது தமது வீடுகளுக்குச் சென்று  விட்டு  வாக்களிக்கும் நேரத்தில் வருகின்றனர். இதனைக்  கட்டுப்படுத்தும் முகமாகவே இத்தகைய நடவடிக்கையை தேர்தல் அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X