Suganthini Ratnam / 2011 ஜூன் 21 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்ட மக்களின் நன்மை கருதி சர்வதேச தரத்திலான பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளப்படும். வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் வருகை தரவுள்ளனர். எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
யுத்தத்தின்போது முகங்களில ஏற்பட்ட காயங்கள், உடம்பில் ஏற்பட்ட தழும்புகள், உதடுகள் மற்றும் அன்னப்பிளவு, எரிகாயங்களுக்கு உள்ளானவர்களுக்கு இந்த பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago