Super User / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹேமந்த்)
கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமான கண்ணகை புரம் கிராம அலுவலர் பிரிவில் ஐக்கிய அபிவிருத்தி நிதியம் வாழ்வாதார உதவிகளை இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுப் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் சுய பொருளாதார மேம்பாட்டை விருத்தி செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட 70 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதேவேளை ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் சுயதொழில் செய்வதற்காக உதவி தொகையாக தலா 25,000 ரூபாய் வீதம் 100 பேருக்கு காசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார், கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் உள்ளிட்ட பலர் பலர் கலந்து கொண்டனர்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025