2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வீரர்களுக்கு யாழ். நகரில் வரவேற்பு

Super User   / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 19 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையேயான தேசிய மட்ட உடற் பயிற்சி போட்டி ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிய புனித அந்தோனியார் கல்லூரி மாணவர்களுக்கு இன்று யாழ். பேருந்து நிலையத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் தீவக வலய கல்வி, கோட்ட கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், கல்லூரி சமூகம், கல்லூரி பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் ஒன்று திரண்டு சாதனையாளர்களை பாராட்டினர்.

புனித அந்தோனியார் கல்லூரி மாணவர்கள் தேசிய மட்டத்தில் இரண்டாவது தடவையாக முதலாம் இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .