2021 மே 15, சனிக்கிழமை

யாழ். கலட்டியில் பட்டப்பகலில் கொள்ளை

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், கலட்டி பகுதியில் உள்ள மூன்று வீடுகளுக்குள் நுழைந்த திருடர்கள், பணம், நகைகளைக் கொள்ளையடித்துள்ளதாக யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இந்த கொள்ளைச் சம்பவத்தில் வீடொன்றில் இருந்து 40 ஆயிரம் ரூபா பணமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று நண்பகல் 11 தொடக்கம் 12 மணிவரையான நேரத்தில் வீட்டில் எவரும் இல்லாத நேரம் பார்த்து இந்தக் கொள்ளையில் திருடர்கள் ஈடுபட்டுள்ளனர்.  யாழ். கல்லடி வீரகத்திப் பிள்ளையார் ஆலயச் சூ10ழலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ் நகரப் பகுதியில் உள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் உரிமையாளர் வீடு, கணனி ஆசிரியர் வீடு மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் வீடுகளிலேயே இக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் ஓட்டினைக் கழற்றி உள்ளே இருந்த சீற்றினை உடைத்து அலுமாரிகளைக் கிளறி அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபா ரொக்கப்பணத்தினை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டில் இருந்த பெண்மணி சந்தைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கதவினைத் திறந்து பொழுதுவீட்டினுள் இருந்து நபர் ஒருவர் மதிலால் ஏறி ஓடுவதைக் கண்டுள்ளார்.

ஏனைய இருவரது வீடுகளிலும் மேற்குறித்தவாறே உடைத்து அலுமாரிகளைக் கிண்டிக்கிளறிவிட்டு  சென்றதாகவும் ஆனால் எத்தகைய பொருளோ, பணமோ களவாடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .