Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதியில் கற்களை பறித்ததாகத் தெரிவிக்கப்படும் லொறி உரிமையாளர் சுன்னாகம் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு அருகாமையிலுள்ள இக்கிரனை ஒழுங்கையில் போக்குவரத்து மேற்கொள்ள முடியாதளவுக்கு கற்கள் பறிக்கப்பட்டன.
இது குறித்து பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து மக்களின் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் கற்கள் பறித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் லொறி உரிமையாளரை சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட லொறி உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையையும் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டனர்.
22 minute ago
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
5 hours ago
9 hours ago