2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர் ஊடுருவல்; இந்திய தூதுவருடன் வடமாகாண கடற்றொழிலாளர்கள் பேச்சு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்திய மீனவர்கள் வடகடல் பகுதியில் உள்நுழைந்து வடக்கின் கடல் வளங்களை அள்ளிச் செல்வது தொடர்பாகவும் இந்திய இழுவைப் படகுகள் வடபகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடை செய்யுமாறு கோரியும் வடமாகாண கடற்றொழிலாளர் சமாசப் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை யாழ். இந்தியத் தூதுவராலயர் எஸ்.மஹாலிங்கத்துடன் சுமார் இரண்டு மணிநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தப் பேச்சுவார்தையில் இந்திய அரசின் கனவத்திற்கு வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளைக் கொண்டு செல்வதுடன் மீனவர் பிரச்சினைக்கு சாதகமான பதிலை இந்தியாவிடம் இருந்து பெற்றுத்தருவதாக யாழ். இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு இந்திய அரசு உறுதியான முடிவுகளைத் தரும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ள அவர், வடபகுதி மீனவர்களின் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாகப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி மீனவ சமூதாயம் கடந்த 30 வருடங்களாக பொருளாதார வளத்தில் மிகவும் பின்னடைந்துள்ளதாகவும் அவர்களின் பொருளாதர வளத்தை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு உதவி புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X